Wednesday, December 16, 2020

DAK PAY New Online payment Application is Launched by Indian post office

 DAK PAY New Application Launched by Indian post office 






Introduction :

தற்போது இந்திய தபால்துறையானது பண பரிமாற்றத்தை குறைத்து digital பணபரிமாற்றத்தை அதிகரிக்கும் வண்ணம் ஒரு புதிய பண பரிமாற்ற செயலியை(Application) அறிமுகம் செய்துள்ளது .

இந்த செயலியின் (Application) பெயர் Dak pay .இந்த செயலியும் phone pe, Google pay ,மற்றும் Paytm போன்ற ஒரு பண பரிமாற்ற செயலி ஆகும் .


இந்த செயலியின் மூலமாக எந்த ஒரு நபரின் வங்கி கணக்கிற்கும் எளிதில் நம்மால் பணம் அனுப்ப முடியும் .

நீங்கள் கடைகளில் ஷாப்பிங் செய்தால் அதற்கான கட்டணத்தை Barcode  மூலமாக ஸ்கேன் செய்து பணம் செலுத்தவும் முடியும் .


Application Download Link :



Dak Pay :

இந்த Dak pay செயலியை முதலில் மேலே கொடுக்கப்பட்ட Link யை click செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .

இதன் பின்னர் உங்களுடைய செயலியை ஓபன் செய்து உங்களின் தொலைபேசி எண்ணினை உறுதி செய்துகொள்ளுங்கள் .

இதன் பின்னர் உங்களுடய சுயதகவல்களை பூர்த்தி செய்து உங்களுக்கான Profile பக்கத்தை உருவக்கி  கொள்ளவும்.




இதன் பின்னர் உங்களின் வங்கி கணக்கினை Add செய்து அதற்கான UPI ID  உருவாக்கி கொள்ளவும் .


அதன் பின்னர் Application க்காக Password யை  உருவாக்கி கொள்ளவும் .இப்போது உங்களின் வங்கி கணக்கில் இருந்து எந்த ஒரு நபருக்கும் எளிதில் பணம் அனுப்பிக்கொள்ள முடியும் .

இந்த application ஆனது Gpay ,phone pe போன்று செயல்படும் ஒரு சிறந்த application ஆகும் .இந்த application ல் IPPB வங்கி கணக்கையும் add செய்ய முடியும் .




No comments:

Post a Comment