Thursday, December 10, 2020

How to change PF Account 10 Years age (DOB)Different Problem

 Wrong Date of Birth Correction in EPFO full producer




Introduction :


இந்த பதிவில் நமது pf கணக்கில் பலருக்கும் அவர்களுடைய பிறந்த தேதி தவறாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு சிலருக்கு 3 ஆண்டுகள் ஒரு சிலருக்கு 10 ஆண்டுகள் தவறான பிறந்த தேதியை அவர்களின் pf கணக்கில் பதிவிட்டுள்ளார் அவர்களின் நிறுவனத்தில்.

இதனை எப்படி சரி செய்வது என்பது தெரியாமல் பலரும் அவர்களுடைய pf பணத்தை எடுக்க முடியாமல் அவதி பட்டு வருகிறார்கள்.

இது போன்ற தவறுகள் செய்திருந்தால் அதனை எப்படி சரி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Bellow 1year DOB Wrong Entry :


முதலில் உங்களுடைய பிறந்த தேதி ஒரு ஆண்டிற்கும் குறைவாக இருந்தால் அதனை online வழியாக மாற்றம் செய்துகொள்ப முடியும் இதற்க்கு எந்த ஒரு ஆவணமும் பதிவேற்றம் செய்ய தேவை  இல்லை.

Online ல் எளிதில் மாற்றி கொள்ள முடியும் இதற்க்கு உங்களின் கணக்கை திறந்து நீங்களே மாற்றம் செய்துகொள்ள முடியும்.

Above 2year DOB Wrong Entry in EPFO:


உங்களுடைய pf கணக்கில் உங்களுடைய பிறந்த தேதி இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாக தவறாக பதிவு செய்திருந்தால் அதனை சரி செய்வதற்கு  கட்டாயம் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு ஆவணம் இருக்க வேண்டும்.

1. Passport,
2. Birth Certificate,
3. Education Transfer  Certificate (TC)

ஆனால் pf இணையதளத்தில் கொடுக்கப்பட்டது தகவல் என்னவென்றால் 3ஆண்டுகளுக்குள் உங்களுடன் பிறந்த தேதி தவறாக இருந்தால் ஆதார் அட்டையை வைத்து திருத்தம் செய்துகொள்ள முடியும் என்று.

இது முற்றிலும் தவறு அதுபோன்று ஆதார் அட்டையை வைத்து எந்த ஒரு வருத்தத்தையும் திருத்தம் செய்ய முடியாது.

நீங்கள் இது போன்ற திருத்தங்களை சரி செய்வதற்கு கட்டாயம் மேலே குறிப்பிட்ட ஏதாவது ஒரு ஆவணம் கட்டாயம் தேவை.

மேலும் உங்களுடைய பிறந்த தேதி 2ஆண்டுக்கு அதிகமாக எத்தனை வருடங்கள்  தவறாக இருந்தாலும் அதனை திருத்தம் செய்வதற்கு joint Declaration form வேண்டும் அதன் மூலமாகவே திருத்தம் செய்ய முடியும்.

இரண்டு வருடங்களுக்கு அதிகமாக உங்களுடைய பிறந்த தேதி தவறாக இருந்தால் online வழியாக திருத்தம் செய்ய முடியாது.

இதற்கு முதலில் joint Declaration form யை பதிவிறக்கம் செய்யவேண்டும். பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள link யை click செய்யவும்.

                                      Joint Declaration Form




இந்த முறையில் joint declaration படிவத்தை பூர்த்தி செய்தி அதனுடன் உங்களின் பிறந்த தேதிக்கான ஆவணத்தின் நகலை  இணைத்து உங்களுடைய நிறுவனத்தில் கையெழுத்து வாங்கி அதன் பின்னர் உங்களுடைய pf அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

நீங்கள் pf அலுவலகம் செல்லும் போது அதனுடைய ஒரிஜினல் ஆவணத்தையும் கையில் கொண்டு செல்வது கட்டாயம்.

இந்த முறையில் உங்களுடைய பிறந்த தேதி எத்தனை வருடம் தவறாக இருந்தாலும் திருத்தம் செய்துகொள்ள முடியும்.

மேலும் ஒருசிலருக்கு 10ஆண்டுகள் பிறந்த தேதி தவறாக இருக்கும் அவரிடம்

1. Passport
2. TC Transfer certificate,
3.Birth certificate,

இதில் எந்த ஒரு ஆவணமும் இருக்காது இவர்கள் எப்படி? திருத்தம் செய்வது என்கின்ற குழப்பம் பலருக்கும் இருக்கும்.

இது போன்றவர்களும் கட்டாயம் passport எடுத்து அதன் பின்னர் உங்களுடைய பிறந்த தேதியை மாற்றம் செய்துகொள்ளலாம்.

இது தவிர வேறு வழிகள் எதுவும் இல்லை அனைவரும் இதுபோன்ற தவறுகள் இருந்தால் மேலே குறிப்பிட்ட அந்த வழிகளையே பின்பற்றவும்.



No comments:

Post a Comment