Thursday, April 15, 2021

How to withdrawal PF Amount in Online After Leaving the Job in 2021

 How to withdrawal PF Amount in Online After Leaving the Job in 2021



Introduction :

இந்த பதிவில் நாம் ஒரு நிறுவனத்தின் பணியில் இருந்து விலகிய பின்னர் நமது PF Settlement க்கு எப்படி விண்ணப்பிப்பது? என்பதை பார்க்கலாம்.

PF AMOUNT WITHDRAWAL ONLINE:


நாம் ஒரு நிறுவனத்தில் பணியில் இருந்து விலகிய பின்னர் குறைந்தது 45 நாட்கள் காத்திருக்க வேண்டும்.அதன் பின்னரே நம்மால் நமது PF Full settlement -க்கு விண்ணப்பிக்க முடியும்.

45 நாட்கள் கடந்த பின்னர் உங்களின் UAN யை Login செய்து அதில் உங்களின் UAN ல் DOE தேதி பதிவிடப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்துகொள்ளவும்.

DOE தேதி பதிவு செய்யாவிட்டால் உங்களின் முழு பணத்தை எடுக்க விண்ணப்பிக்க முடியாது.



இதன் பின்னர் உங்களின் UAN ல் உங்களின் KYC ஆவணக்கள்
1. ஆதார் எண்,
2. PAN எண்,
3. வங்கி கணக்கு எண்,

இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

இதன் பின்னர் நீங்கள் உங்களின் full PF Settlement க்கு விண்ணப்பிக்கலாம்.

Apply PF Claim Form 19 :



நீங்கள் PF Settlement ற்க்கு விண்ணப்பிக்க விரும்பினால் முதலில் நீங்கள் தேர்வு செய்யவேண்டியது.
Claim form 19.பலரும் இதில் செய்யும் தவறு என்னவென்றால் Form 19 யை claim செய்யாமல் நேரடியாக Claim Form 10C யை தேர்வு செய்கிறார்கள் அவ்வாறு செய்யும் பொது உங்களுக்கு claim (Rejected )நிராகரிக்கப்படும்.

ஆதலால் முதலில் நீங்கள் தேர்வு செய்யவேண்டியது Form 19 இதனை தேர்வு செய்து பின்வரும் படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்யவேண்டும்.

இதன் தொடர்ச்சியாக உங்களின் UAN ல் இணைக்கப்பட்டுள்ள வங்கியின் காசோலையை பதிவேற்றம் செய்யவேண்டும்.

முடிந்தவரையில் வங்கியின் காசோலையை பதிவேற்றம் செய்து PF Claim செய்வது சிறந்தது.

வங்கியின் passbook யை பதிவேற்றம் செய்யலாம் ஆனால் சில நேரங்களில் அது நிராகரிக்கப்படும் ஆதலால் வங்கியின் காசோலையை பதிவேற்றம் செய்வது சிறந்தது.

Form 15G Upload :

இதனை தொடர்ந்து நீங்கள் உங்களின் UAN ல் PAN எண்ணினை இணைத்திருந்தால் நீங்கள் online ல் Form 15G யை பதிவேற்றம் செய்ய முடியும்.

இதற்க்கு நீங்கள் form 15G யை பூர்த்தி செய்து அதனை scan செய்து அதனை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதால் வரி பிடித்தம் செய்வதை தவிர்க்க முடியும்.

இதன் பின்னர் இறுதியாக form 19 யை பூர்த்தி செய்து OTP யை பதிவு செய்து உறுதி செய்துகொள்ளவும்.

PF CLAIM FORM 10C :


Claim Form 19 யை விண்ணப்பித்த பின்னர் அதனை தொடர்ந்து claim Form 10C யை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பலரும் form 19யை மட்டும் விண்ணப்பிக்கிறார்கள் அவ்வாறு விண்ணப்பித்தால் உங்களின் pension பணமானது உங்களுக்கு கிடைக்காது உங்களின் கணக்கிலேயே கிடக்கும்.

மேலும் நீங்கள் ஓன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனத்தில் பணி புரிந்திருந்து உங்களின் மொத்த பணியனுபவம் 9.5 ஆண்டுகளுக்கு அதிகமாக இருந்தால் நீங்கள் form 10c யை விண்ணப்பிக்க கூடாது. மாறாக Form 10D யை விண்ணப்பிக்க வேண்டும்.

Claim Form 10D யை விண்ணப்பிக்க உங்களின் வயது 58யை எட்டியிருக்க வேண்டும்.அதற்க்கு குறைவான வயதில் நீங்கள் இருந்தால் உங்களால் 10D க்கு விண்ணப்பிக்க முடியாது உங்களின் வயது 58யை தொடும் வரையில் காத்திருக்க வேண்டியது அவசியம்.


உங்களின் மொத்த பணியனுபவம் 9.5 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் நீங்கள் Claim Form 10C யை விண்ணப்பிக்க வேண்டும்.

Clim Form 10C யை விண்ணப்பிக்கும் போது நீங்கள் Form 15G upload செய்ய தேவை இல்லை அதற்கான upload பக்கம் உங்களுக்கு தோன்றாது.

வங்கியின் காசோலையை மட்டும் பதிவேற்றம் செய்தால் போதும்.

படிவம் முழுவதையும் பூர்த்தி செய்த பின்னர் இறுதியாக OTP எண்ணினை பதிவு செய்து உறுதி செய்துகொள்ளவும்.

இதன் பின்னர் Claim form 19 மற்றும் Claim form 10C ஆகிய இரண்டையும் print எடுத்துக்கொள்ளவும் இதனுடன் உங்களின் pan அட்டை நகலை இணைக்கவும்.

அதன் பின்னர் Form 15G யை பூர்த்திசெய்து அதனுடன் இணைக்கவும்.



இறுதியாக இவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து அந்த படிவங்கள் அனைத்தையும் உங்களின் pf அலுவலகத்திற்கு நேரடியாக கொண்டு கொடுக்கவும். நேரடியாக செல்ல முடியாத பற்றத்தில் Register post மூலமாக அனுப்பவும்.

இவ்வாறான வலி முறைகளை கடை பிடிப்பதன் மூலமாக உங்களுக்கு எந்த ஒரு வரி பிடித்தமும் இல்லாமல் முழுமையாக பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

இது போன்ற பயனுள்ள தகவலை தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின் தொடரவும்.

4 comments:

  1. Thanks you bro

    Ipo 2 or 3 companies la work panirukan leaving auitan end of date kuduthutanga ana calim panna pona first option form 31 mattum than show aguthu athuku pinadi than service panna company member id show aguthu ipo previous companies oda pension amount epdi apply panrathu please reply me

    ReplyDelete
    Replies
    1. Same problem brother yarachu solunga please epdi edukurathunu

      Delete
    2. 2companylayum DOE date kuduthachanu paarunka last work pannina DOE Date kudukkalana form 31 thaan open aakum So last company DOE Date check pannunka .next 1st company amount a 2nd companykku transfer pannunka apram athu credit aanathu claim apply pannunka

      Delete
  2. Hi bro, i need some suggestion from u... pf related doubt

    Enudaiya husband pf accountla another member amount add airunthuthu, but avarudaya amount claim pani kuduthutanga pf officela but yapadi theriala...

    But enudaiya husband accountla erukura amount claim pani thara romba late panranga pf officela and complaint letterum pugar pettila potom athukum response ella.....

    So any solution solunga friends onlinela grievance pota problem solve aguma.......

    ReplyDelete