Thursday, April 15, 2021

விதியை மீறும் SBI வாடிக்கையாளர்களிடம் இருந்து 300கோடி வசூல்

 விதியை மீறும் SBI வாடிக்கையாளர்களிடம் இருந்து 300கோடி வசூல்



Introduction :

தற்போது SBI வங்கியானது தனது வாடிக்கையாளர்களிடமிருந்து சுமார் 300 கோடி ரூபாய் வரையில் வசூல் செய்துள்ளது SBI வாடிக்கையாளர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Zero Balance Account :

SBI வங்கியில் zero balance கணக்கை வைத்திருக்கும் நழிவச்ச பின்தங்கிய வாடிக்கையாளர்களிடம் இருந்து இந்த 300கோடி ரூபாயை sbi வங்கியானது வசூல் செய்துள்ளது என்பதை ஐஐடி யானது கண்டுபிடித்துள்ளது.

இந்த 300 கோடி ரூபாயை கடந்த 5ஆண்டுகளில் மட்டும் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

BSBDA ACCOUNT :

SBI வங்கியில் BSBDA கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு குறைந்த பற்ற இருப்பு தொகையும் கணக்கில். வைத்திருக்க தேவை இல்லை.

மேலும் எந்த சேவை கட்டணமும் இல்லை எத்தனை முறை வேண்டுமானாலும் பணத்தை கணக்கில் deposit செய்துகொள்ளலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் பணம்  எடுத்துக்கொள்ளலாம் என்றும் ஏற்கனவே அறிவித்திருந்தது .




ஆனால் தற்போது இந்த வாடிக்கையாளர்களிடம் இருந்து தான் sbi வங்கியானது 300கோடியை வசூல் செய்துள்ளது என்பதை மும்பை ஐஐடி நடத்திய ஆயிவில் கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மாதம் 4முறைக்கு மேல் எடுத்தால் கட்டணம் :


இந்த zero balance கணக்கை வைத்திருக்கும் வாடிகையாளர்களிடமிருந்து RBI விதி முறைகளை மீறி SBI வங்கியானது கட்டணம் வசூல் செய்துள்ளது.

இந்த கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 2015ம் ஆண்டு முதல் மாதம் ஒன்றுக்கு 4 முறைக்கும் மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறைக்கும் ரூபாய் 17.70 வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து வசூல் செய்துள்ளது.

இது நேரடியாக RBI விதிகளை  மீறும் விதமாக உள்ளது எனவும் ஐஐடி வலியுறுத்துகிறது.

இதுவரை 2015 முதல் 2020 வரையில் ரூபாய் 300 கோடிக்கும் மேல் sbi கட்டணம் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடவடிக்கை எடுக்கப்படுமா? :



நாட்டின் மிகப்பெரிய வங்கியான SBI வங்கியானது இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது மிகவும் வேதனை அளிக்கும் விதமாக உள்ளது.

இதனை தொடர்ந்து நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியான பஞ்சாப் நஸ்னல் வங்கி 3.9 கோடி வாடிக்கையாளர்களிடம் இருந்து 9.9கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.

இப்படி நாட்டின் மிகப்பெரிய முதன்மை வங்கிகள் RBI ன் விதிகளை நேரடியாக மீறிஇருப்பது மிகவும் வேதனை தருவதாக உள்ளது. இந்த விதிகளை மீறிய காரணத்திற்காக இந்த வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐஐடி வலியுறுத்தியுள்ளது.

இது போன்ற பெரிய நிதி நிறுவனகள் செய்யும் தவறுகளுக்கு அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


No comments:

Post a Comment