Thursday, April 1, 2021

LPG சமையல் எரிவாயு Cylinder திடீர் விலை குறைப்பு

 LPG சமையல் எரிவாயு Cylinder திடீர் விலை குறைப்பு  









Introduction :

இன்று  சமையல் எரிவாயு Cylinder விலையானது திடீரென 10 ரூபாய் குறைத்துள்ளது .இதே போல பெட்ரோல் டீசல் விளையும் லிட்டருக்கு 60காசுகள் குறைத்துள்ளது .இதனை பற்றிய முழு தகவலையும் இந்த பதிவில் பார்க்கலாம் .

Cylinder விலைகுறைப்பு :

தற்போது இந்தியாவில் உள்ள 5 முக்கிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தீவிரமாக  நடைபெற்றுவருவதால் அதனை  கருத்தில்  கொண்டு தற்போது இந்த விலை குறைப்பு   செய்யப்பட்டுள்ளது  என பலராலும் பார்க்கப்படுகிறது  .

தற்போது  நடைபெறவிருக்கும் சட்டமன்ற   தேர்தலை முன்னிட்டு கடந்த 31 நாட்களாக சமையல் எரிவாயு Cylinder ல் எந்த ஒரு  விலையேற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .




மேலும் பெட்ரோல் ,டீசல்  விலை  முன்னர் ஒரு முறை 60 பைசா விலை குறைப்பு செய்யப்பட்டது .தற்போது மீண்டும் பெட்ரோல் ,டீசல் விலையில் 60பைசா விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது குறிபிடத்தக்கது .

தற்போதய Cylinder விலை :


தற்போது Cylinder விலையானது 10ரூபாய்   குறைக்கப்பட்ட நிலையில் புதிய விலை  பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது சென்னையில் Cylinder ன் விலையானது இதற்க்கு முன்னர் 835க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 10ரூபாய் குறைக்கப்பட்டு 825 ரூபாய்க்கு விபனை செய்யப்படுகிறது.


சேலத்தில் 853க்கு விற்பனை செய்யப்பட்ட Cylinder ன் விலையானது 843 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.



தற்போது ஏற்பட்டுள்ளது சமையல் எரிவாயு Cylinder ன் விலையானது மக்கள் மத்தியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது செய்யப்பட்டுள்ளது இந்த 10ரூபாய் விலை குறைப்பு மக்களுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது எனவும் கருதுகிறார்கள்.

இது குறித்த உங்களின் கருத்துக்களை கீழே பதிவு செய்யவும்.




No comments:

Post a Comment