Wednesday, January 8, 2020

How to merge PF / Transfer pf account in online full details explained Tamil

              PF Amount Transfer / Merge Full details 


Introduction :


➤   இந்த பதிவில் உங்களின் pf பணத்தை ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றோரு நிறுவனத்தின் pf கணக்கிற்கு எப்படி transfer செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .


➤   ஒருவர் 2 அல்லது அதற்க்கு மேற்பட்ட நிறுவனத்தில் பணிபுரிந்திருந்தால் அவருடைய UAN -ல் ஒன்றிற்கு மேற்பட்ட மெம்பெர் ID கொடுக்கப்பட்டிருக்கும் .மேலும் நீங்கள் உங்களின் pf பணத்தை claim செய்யும்போது நீங்கள்  இறுதியான  பணிபுரிந்த நிறுவனத்தின் மெம்பெர் ID மட்டுமே தோன்றும் அதற்க்கு முன்னதாக பணிபுரிந்த நிறுவனத்தின் மெம்பெர் ID தோன்றாது .


➤   அதனால் நீங்கள் இதற்க்கு முன்னதாக பணிபுரிந்த நிறுவனத்தின் மெம்பெர் ID ல் உள்ள பணத்தை தற்போது அல்லது இறுதியாக பணிபுரிந்த நிறுவனத்தின் மெம்பெர் ID க்கு அனுப்பி அந்த பணம் தற்போது உள்ள அல்லது இறுதியாக பணிபுரிந்த மெம்பெர் ID ல் வந்து சேர்ந்ததும் நீங்கள் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும் .

PF பணத்தை எப்படி Transfer செய்வது என்பதை தெரிந்துகொள்ள கீழே உள்ளே விடியோவை பார்க்கவும் 




➤   இதைப்போலவே நீங்கள் எத்தனை நிறுவனத்தில் பணிபுரிந்திருந்தாலும் அத்தனை நிறுவனத்தின் மெம்பெர் ID ல் உள்ள பணத்தை நீங்கள் இறுதியாக பணிபுரிந்த நிறுவனத்தின் மெம்பெர் ID க்கு அனுப்பி அந்த member ID-ல் பணம் வந்து சேர்ந்ததும் நீங்கள் claim செய்தால் உங்களின் மொத்த பணமும் உங்களுக்கு கிடைத்துவிடும் .


➤   நீங்கள் Transfer செய்யும்போது உங்களின் Employee share மற்றும் Employer share மட்டுமே transfer ஆகுமே தவிர உங்களின் pension பணமானது transfer ஆகாது இது நீங்கள் எத்தனை நிறுவனத்தில் பணிபுரிந்திருந்தாலும் அத்தனை நிறுவனத்தின் pension பணமும் அரசு பென்ஷன் கணக்கில் சென்று சேர்ந்துவிடும் .நீங்கள் இதனை transfer செய்ய தேவை இல்லை .


➤   நீங்கள் இறுதியாக உங்களின் pf பணத்தை எடுக்கும்போது உங்களுக்கு இந்த பென்ஷன் பணம் முழுவதும் உங்களின் வங்கி கணக்கிற்கு அனுப் பட்டுவிடும்.




1 comment:

  1. bro unga number konjam kodunga pesanum pf detail pathi kekkanum..my num 7200451026 sms pannunga nan call pandren

    ReplyDelete