Tuesday, July 7, 2020

PF Claim OTP is Not Generate ,OTP is did't sensing full problem with solution full details in Tamil

PF Claim OTP is Not Generate ,OTP is did't sensing  full problem with solution full details in Tamil






Introduction :

இந்த பதிவில் நீங்கள் உங்களின் PF பணத்தை Claim செய்யும்போது இறுதியாக உங்களின் ஆதார் அட்டை எந்த தொலைபேசி என்னுடன் இணைக்கப்பட்டுள்ளது அந்த எண்ணிற்கு ஒரு one Time Password ஓன்று அனுப்பப்படும் அதனை பதிவு செய்து உறுதி செய்யும்போது தான் உங்களின் pf claim ஆனது நிறைவடையும் .


ஆனால் இதில் சிலருக்கு  பலவிதமான  பிரச்சனைகள் ஏற்படுகிறது அது எதனால் ஏற்படுகிறது ?

என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது ?

அதனை எப்படி சரி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .


ஏற்படும் பிரச்சனைகள் :

1.ஒருசிலருக்கு அவருடைய PF Claim யை submit செய்யும்போது OTP ஆனது               வருவதில்லை .



2.இன்னும் சிலருக்கு OTP வரும் ஆனால் வருகின்ற otp எண்ணினை பதிவு செய்து உறுதி செய்யும்போது அந்த OTP ஆனது verify ஆகாமல் Error வரும் .




3.இன்னும் சிலருக்கு Error: Aadhar Number dose not have Mobile number  இதுபோன்ற error .


எதனால் வருகிறது :

முதல் மற்றும் மூன்றாவது பிரச்சனைக்கு காரணம் உங்களின் ஆதார் எண்ணுடன் எந்த ஒரு தொலைபேசி எண்ணும் இணைக்காமல் இருந்தாலோ 

அல்லது 

நீங்கள் ஏற்கனவே இணைத்த உங்களின் தொலைபேசி எண்ணானது சிலருக்கு காலப்போக்கில் OTP  Generate ஆகாமல் இருக்கும் ஒரு நிலைக்கு சென்றுவிடும்  இதுபோன்ற தருணங்களில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் .


இரண்டாவது கொடுக்கப்பட்டுள்ள பிரச்சனைக்கு காரணம் Technical Problem தொழில்நுடப கோளாறு காரணமாக இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் .இது போன்ற பிரச்சனைக்கும் நாம் எந்த விதத்திலும் காரணம் இல்லை .


எப்படி சரி செய்வது ?

1.முதலாவது மற்றும் மூன்றாவது பிரச்னையை சரி செய்வதற்கு நீங்கள் உங்களின் அருகில் உள்ள இ சேவை மையம் அல்லது அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று உங்களின் ஆதார் எண்ணுடன்  உங்களின் தொலைபேசி எண்ணினை இணைக்க வேண்டும் .

நீங்கள் இ சேவை மைத்தின் மூலமாக இணைக்கும் பொது அடுத்த 15 நாட்களுக்குள் உங்களின் தொலைபேசி எண்ணானது உங்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுவிடும் .இதன் பின்னர் நீங்கள் உங்களின் pf பணத்தை எடுக்க முற்படும்போது OTP உங்களின் தலைப்பேசி எண்ணிற்கு கிடைத்துவிடும் என்பது குறிப்பிட தக்கது .

2.இரண்டாவதாக கொடுக்கப்பட்டுள்ள பிரச்னையை சரி செய்வதற்கு நீங்கள் online ல் Grievance மூலமாக complaint செய்யவேண்டும் .எனது  PF Claim  submit செய்யும்போது OTP ஆனது Verify ஆகாமல் Error வருகிறது என்று நீங்கள் புகார் அளிப்பதன் மூலமாக உங்களின் பிரச்சனைகள் சரி செய்யப்படும் .




நீங்கள் புகாரளிக்கும்போது உங்களுக்கு வரும் Error தகவலை screen short upload செய்து complaint செய்யவேண்டும் .

மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் .




இதுபோன்ற பயனுள்ள தகவலை தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும் .

No comments:

Post a Comment