PF Account KYC Update Page New Interface New Update 2021 Full
details
Introduction :
தற்போது நமது PF கணக்கில் KYC Update செய்யும்பக்கத்தில் புதிய பல புதிய
மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது .இதற்க்கு முன்னர் இருந்த KYC
பதிவேற்றம் செய்யும் பக்கம் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது .இதனை பற்றிய
முழு தகவலையும் இந்த பதிவில் பார்க்கலாம் .
KYC New Update :
தற்போது நமது PF கணக்கில் KYC Update செய்யும் பக்கத்தில் புதிய மாற்றங்கள்
கொண்டுவரப்பட்டுள்ளது .அதில்
1.ஆதார்
2.வங்கி கணக்கு
3.பாஸ்போர்ட்
4.பான் கார்டு
ஆகிய தகவல்கள் மட்டுமே காண்பிக்கப்படும் அதனை மட்டும் பதிவேற்றம் செய்தால்
போதும் .
மேலும் பாஸ்போர்ட் தேவை இல்லை ,ஆதார் ,பான் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய
தகவலை மட்டும் Update செய்தாலே PF Claim செய்வதற்கு போதுமானது .
KYC Digitally Automatic Rejected :
மேலும் இந்த Update ல் நீங்கள் உங்களின் ஆவணங்கள் KYC ல் Update செய்தால்
நீங்கள் Update செய்து 60நாட்களுக்குள் உங்களின் Employer Approved செய்யாமல்
இருந்தால் உங்களின் KYC ஆவணம் நிராகரிக்கப்படும் .
KYC Update Using Aadhar Register OTP :
இதற்க்கு முன்னர் வரையில் PF கணக்கில் KYC Update செய்வதற்கு எந்த OTP
ம் தேவை இல்லை ஆனால் தற்போது கொடுக்கப்பட்டுள்ள Update ன் படி வங்கி
கணக்கை KYC ல் இணைக்க உங்களின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு
ஒரு OTP ஓன்று அனுப்பப்படும் அதனை பதிவு செய்த பின்னரே உங்களின் வாங்கி கணக்கு
இணைக்க முடியும் .