Tuesday, July 16, 2019

What is mean PF Amount Transfer ?what is use of PF Amount transfer ?How to Transfer ?

அனைத்து வாசகர்களுக்கும் வணக்கம் இந்த பதிவில்
1.PF பணம் transfer என்றால்  என்ன ?
2.PF பணத்தை transfer செய்வதால் என்ன பயன் ?
3.PF பணத்தை எப்படி transfer செய்வது? என்பதை பார்க்கலாம் .




1.PF பணம் transfer என்றால்  என்ன ?


       pf பணம் transfer என்பது  தனி ஒரு நபர் ஓன்று அல்லது அதற்க்கு மேற்பட்ட நிறுவனத்தில் ஒரே UAN எண்ணின் கீழ் வேலை செய்திருந்தால் அவருடைய UAN login செய்யும் பொது ஒன்றிற்கு மேற்பட்ட மெம்பர் ID காணப்படும் இது அவர் எத்தனை நிறுவனத்தில் பனி புரிந்திருக்காரோ அத்தனை மெம்பர் ID கள் அதில் காண்பிக்கப்படும் .





இப்போது அவர் அவருடைய முழு pf  தொகையையோ அல்லது pf அட்வான்ஸ் தொகையையோ எடுக்க வேண்டுமென்றால் அவர் இறுதியாக பனி புரிந்த நிறுவனத்தின் மெம்பர் ID மட்டுமே தோன்றும் .மற்ற நிறுவனத்தின் மெம்பர் ID-தோன்றாது நிறுவனத்தின் மெம்பர் IDயை தேர்வு செய்யவும்  முடியாது .


இப்போது எல்லாருக்கும்  ஏற்படும் சந்தேகம் யனது பழைய நிறுவனத்தில்  pf பணத்தை எப்படி எடுப்பது என்று .

இதற்காகத்தான் pf பணத்தை transfer செய்யவேண்டும் .அதாவது உங்களின் பழைய நிருவனத்தில் உள்ள pf பணத்தை நீங்கள்  தற்போது பணிபுரிந்த நிறுவனத்தின்  மெம்பர் ID-க்கு transfer செய்யவேண்டும் அப்படி  transfer  செய்தால் மட்டுமே உங்களின் பழைய  நிறுவனத்தின் pf பணத்தை எடுக்க முடியும் .



Transfer செய்த pf பணமானது உங்களின் தற்போதைய pf மெம்பர் ID-ல் எப்போது வந்து சேர்கிறதோ  அதன் பின்னர் உங்களின் pf பணத்தை எடுக்க முடியும்  .இந்த பணம் transfer 1 மாதம் முதல் 3 மாதங்கள் கூட ஆகலாம் .






மேலும் அப்படி transfer செய்தால் மட்டும் முழு pf எடுத்துவிட முடியாது ,தற்போது அல்லது இறுதியாக பணிபுரிந்த நிறுவனத்தில் தங்கள் பணியில் இருந்து விலகி 3மாதங்கள் கடந்திருக்க வேண்டும் மற்றும் (DOE date ) நிறுவனத்தில் இருந்து வெளியேறிய நாள் உங்கள் pf பக்கத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் .அப்படி செய்திருந்தால் மட்டுமே நீங்கள் உங்களின் ,முழு pf  பணத்தையும்  எடுக்க முடியும் .



2.PF பணத்தை transfer செய்வதால் என்ன பயன் ?



                                    pf பணத்தை  transfer செய்வதால் என்ன பயன் என்றால் உங்களின் பழைய நிறுவனத்தில் பணிபுரிந்த பொது உங்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட  pf பணத்தை எடுக்க முடியும் .transfer செய்யாமல் உங்களின் பழைய pf பணத்தை எடுக்க முடியாது .

இந்த transfer என்பது ஒரே UAN எண்ணின் கீழ் பணிபுரிந்தவர்களுக்கு மட்டும் பொருந்தும் .தனி தனி UAN எண்ணில் பணிபுரிந்திருந்தாழும் transfer செய்யலாம் ஆனால் அதற்க்கு இரண்டு UAN -ல் உள்ள உங்களின் விபரங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் ,சிறு தவறுகள் இருந்தாலும் Transfer செய்ய முடியாது .


3.PF பணத்தை எப்படி transfer செய்வது?



உங்களின் pf பணத்தை transfer செய்வதற்கு முதலில் உங்களின் pf கணக்கை login செய்துகொள்ளுங்கள் அதன் பின்னர் Online service என்ற தேர்வினை தேர்வு செய்யவும் .அதன் பின்னர் 3 தேர்வுகள் தோன்றும் அதில் One Member One EPF Account (Transfer Request) என்பதனை தேர்வு செய்யவும் .


Online service >One Member One EPF Account (Transfer Request)




பின்னர் மேலே படத்தில் இருப்பது போன்று பக்கம் தோன்றும் இப்போது Previous employer என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .



பின்னர் அதன் அருகில் உள்ள கட்டத்தில் உங்களின் பழைய நிறுவனத்தின் மெம்பர் ID-யை பதிவு செய்யவும் /பின்னர் அதன் அருகில் உள்ள Get details என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் . இப்போது உங்களின் பழைய நிறுவனத்தின் பெயர் மற்றும் அதனுடைய மெம்பர் ID பற்றிய முழு விபரங்களும் தோன்றும் .




இப்போது உங்களின் பழைய நிறுவனத்தின் விபரங்களை சரிபார்த்து பின்னர் உங்களின் விபரங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பற்றத்தில் அதனை தேர்வு செய்யவும் .



இப்போது உங்களின் ஆதார் எந்த தோலை பேசி எண்ணில் இணைக்கப்பட்டிருக்கிறதோ அந்த எண்ணிற்கு ஒரு one time password வரும் அதனை கீழே கொடுக்க பட்டிருக்கும் கட்டத்தில் பதிவு செய்யவும் .உதாரணத்திற்கு மாதிரி படம் கீழே கொடுக்க பட்டுள்ளது அதை பார்க்கவும் .





இப்போது One time  password பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Submit தேர்வினை தேர்வு செய்யவும் .இப்போது உங்களின் pf பணம் transfer செய்வதற்கான கோரிக்கை நிறைவேற்றப்பட்டது என்பத்தை  தெரிந்துகொள்ளலாம் .



1 comment:

  1. Just to add, we could really help share your posts and your website further. Let us know if we can be of help. personal loans online same day

    ReplyDelete