Sunday, July 7, 2019

How much amount is take in pf advance amount claim in online

அணைத்து வாசகர்களுக்கும் வணக்கம் இந்த பதிவில் ஒருவர் பணியில் இருக்கும்போது எவ்வளவு பணம் அட்வான்ஸ் தொகையாக அவருடைய pf கணக்கில் இருந்து பெறமுடியும். என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



pf அட்வான்ஸ் பணத்தை பொறுத்தவரை இரண்டுவிதமான நபர்கள் pf அட்வான்ஸ் தொகையை எடுப்பதற்கு விண்ணப்பிக்கலாம்.

1.பணியில் இருப்பவர்
2.பணியை விட்டு விலகிய பின்னும் (doe) வெளியேறிய தேதி குறிப்பிடபடாமல் இருப்பவர்களும்  விண்ணப்பிக்கலாம் .



அனைவருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம் என்னவென்றால் எவ்வளவு பணத்தை அட்வான்ஸ் தைக்கையாக எடுக்கலாம் என்பதே

pf கணக்கில் அட்வான் தொகையாக உங்களின் ஷேர் அதாவது (employee share)என கொடுக்கப்பட்டிருக்கும் தொகையில் மொத்தம் எவ்வளவு தொகை உள்ளதோ அதில் 75% பணத்தை அட்வான்ஸ் தொகையாக பெற முடியும் .


எம்பிளாயீ ஷேர் (employee  share ) என்பது உங்களின் பாஸ் புக்கில் முதலாவதாக கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும் அதில் குறித்திருக்கும் தொகையே உங்களின் ஷேர் (employee share ) இந்த குறிப்பிட பட்டிருக்கும் தொகையில் மொத்த தொகை எவ்வளவு உள்ளதோ அதில் 75% மட்டும் எடுக்க முடியும் .






ஒருவர் ஒருமுறை ஆன்லைனில் அட்வான்ஸ் பணத்தை எடுத்த பின்னர் மறுபடியும் எப்போது எடுக்கலாம்?

இந்த கேள்வி அனைவருக்கும் இருக்கக்கூடியது .ஒருமுறை ஆன்லைனில் அட்வான்ஸ் பணத்தை எடுத்த பின்னர் மீண்டும் 15 நாட்கள் கழித்து மறுபடியும் அட்வான்ஸ் தொகை வேண்டி விண்ணப்பிக்க முடியும் .


குறைந்தது 15நாட்கள் கழித்து மறுபடியும் அட்வான்ஸ் தொகை வேண்டி விண்ணப்பபித்தால் உங்களின் விண்ணப்பம்  கட்டாயம் ஏற்கப்படும் .



இதற்கும் குறைவான நாட்களில் மீண்டும் விண்ணப்பித்தால் கண்டிப்பாக உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் .


ஒருவர் அதிகப்பற்றமாக 5 முறை மட்டுமே pf பணத்தை ஆன்லைனில் எடுக்க முடியும் .அதற்க்கு மேல் உங்களின் pf அலுவலகத்தின் மூலமாகவே எடுக்க முடியும் .

No comments:

Post a Comment