EPFO Claim rejected for DOJ and DOE Date Wrongly Updated in Employer
Introduction:
⇛ இந்த பதிவில் உங்களுடைய pf claim Rejected ஆவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த தவறுகளும் ஒரு காரணமாக இருக்கலாம் .⇛ உங்களுட employer உங்களுட DOJ (Date of Join ) அல்லது DOE (Date of End ) தவறாக குறிப்பிடும் பற்றத்தில் உங்களின் claim நிராகரிக்கப்படும் .
நிராகரிப்புக்கு காரணம் :
⇛ இந்த பதிவில் நமது youtube viewers ஓருவருக்கு அவருடைய இறுதி மாத pf contribution பணம் அவருடைய pf கணக்கில் credit ஆவதற்கு முன்னதாக DOE நாளை பதிவிட்டிருக்கிறார் இதனால் அவருடைய pf பணத்தை claim செய்யுபொது அவருடைய claim விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை .
Joint Declaration Form Download Link
👉👉👉click care to Download
எதனால் DOE தேதி பதிவிட அதிக நாள் ஆகிறது :
⇛ இந்த காரணத்தினாலேயே பெரும்பாலான நிறுவனங்களில் உடனடியாக DOE தேதியை பதிவிடுவதில்லை .மேலும் பெரும்பாலான நிறுவனங்களில் அவருடைய pf contribution பணத்தை அவருடைய கணக்கில் செலுத்துவதற்கு சற்று கால தாமதம் ஏற்படும் .
⇛ இந்த காரணத்தை கருத்தில் கொண்டே பெரும்பாலான நிறுவனங்களில் அவருடைய pf DOE தேதியை உடனடியாக பதிவிடுவதில்லை என்பது குறிப்பிட தக்கது .
PF claim நிராகரிப்புக்கு கொடுக்கப்பட்ட Error :
1,Your PF Contribution received after DOL 2,Not sighed / Attested
மேலும் இதனை சரி செய்யும் வழிகள்
⇛ இதனை சரி செய்வதற்கு ஒரே வலி மட்டுமே உள்ளது உங்களின் Doe தேதியை மாற்ற வேண்டும் அதற்க்கு Joint declaration Form என்கிற விண்ணப்பத்தின் வழியாக சரி செய்யவேண்டும் .
⇛ முதலில் Joint declaration form யை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் அதன் பின்னர் அந்த விண்ணப்பத்தில் உங்களின் PF அலுவலகத்தின் மாவட்டம் ,உங்களின் பெயர், UAN எண்ணினை பதிவிட வேண்டும் ,
⇛ இதன் பின்னர் உங்களின் தவறாக குறிப்பிடப்பட்ட DOE தேதியையும் மற்றும் அதற்கான சரியான DOE தேதியையும் படிவத்தில் பதிவிட வேண்டும் .
⇛ அதன் பின்னர் உங்களின் பெயர் மற்றும் கையப்பத்தை பதிவிட்டு உங்களின் employers அவருடைய பெயர் ,அவருடைய கையப்பம் மற்றும் உங்களின் நிறுவனத்தின் சீல் வைத்து அதனுடன் நீங்கள் நிறுவனத்தை விட்டு நின்றதற்கான ஆதாரங்களையும் இணைத்து உங்களின் PF அலுவலகத்தில் கொண்டு கொடுக்கவேண்டும் .
⇛ இவ்வாறு செய்தால் உங்களின் DOE தேதியை மாற்ற முடியும் .
Joint Declaration Form Download Link
DOE date மாற எடுத்துக்கொள்ளும் கால அளவு :
⇛ நீங்கள் இந்த படிவத்தை உங்களின் PF நிறுவனத்தில் சமர்ப்பித்த அடுத்து 30 நாட்களில் இருந்து 40 நாட்களுக்குள் உங்களின் தவறான DOE தேதி மாற்றம் செய்யட்டும் .இதன் பின்னர் நீங்கள் உங்களின் pf பணத்தை ஆன்லைன் வழியாக claim செய்துகொள்ள முடியும் .
மேலும் இந்த தகவலை விடியோவாக கீழே கொடுத்துள்ளேன் பார்க்கவும் 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
⇛ மேலும் மற்றோருநபருக்கு அவருடைய DOJ தேதியை அவருடைய EMPLOYERS தவறாக குறிப்பிட்டுள்ளார் அதனுட படத்தை கீழே கொடுத்துள்ளேன் .
⇛ இவருடய pension பணத்திற்கான DOJ தேதியை தவறாக குறிப்பிட பட்டுள்ளது .ஆனால் சரியான தேதி வருடைய form 19 ல் குறிப்பிடப்பட்டுள்ளது .
⇛ இதனால் அவருடைய பென்ஷன் பணத்தை எடுக்க முற்படும் பொது Error வருகிறது பணத்தை எடுக்க முடியவில்லை .
⇛ மேலும் இது போன்று DOJ அல்லது DOE தவறாக கொடுக்கப்பட்டிருந்தால் அதனை சரி செய்வதற்கு மேலே குறிப்பிட்டுள்ள அதே வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் .Joint Declaration form யை பயன்படுத்தி உங்களின் தவறான தேதியை மாற்றம் செய்ய வேண்டும் .
⇛ இவ்வாறு செய்தால் மட்டுமே உங்களின் pf பணத்தை ஆன்லைனில் எடுக்க முடியும் .
Bro yenakku na munnadi work panna member id ya ippo irukura member id ku transfer panna mudiyala doe yellam correct ah dha irukku ana previous employer does not have authorized digital signature hence claim can not be processed nu varudhu bro idhuku yenna pandradhu
ReplyDelete