Thursday, October 31, 2019

UAN Activation Error best solution follow this way

                                         Uan Activation error solution


Introduction :


ஒருவருடைய PF பணத்தை ஆன்லைனில் எடுப்பதற்கு கட்டாயமாக அவருடைய UAN எண்ணினை Activation செய்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் .



ஆனால் அனைத்து நிறுவனங்களிலும் ஒரு சில பணிபுரியும் நபர்களின் தகவல்களை அவர்கள் தவறாக PF கணக்கில் பதிவு செய்துவிடுகிறார்கள் .இதனால் அவர்கள் அவருடைய UAN -யை Activation செய்யும் பொது அவருடைய தகவலை சரியாக கொடுத்தான் activation செய்ய முடியாது .


அவர்கள் activation செய்யும் பொது Error உங்களுடைய பெயர் ,உங்களின் பிறந்த தேதி தவராக உள்ளது என்று error வரும் இந்த தவறுக்கு காரணம் உங்களின் நிறுவனத்தில் உங்களின் தகவலை தவறாக பதிவு செய்ததே காரணம் .


இதனை சரி செய்தால் மட்டுமே உங்களால் உங்களின் UAN -யை Activation செய்யமுடியும் .

Error Correction:



இதனை ஆன்லைன் வழியாக சரி செய்ய முடியாது .இதனை Joint  declaration form வழியாகவே சரி செய்ய முடியும் .


இதற்க்கு முதலில் Joint Declaration form யை பதிவிறக்கம் செய்யவும் கீழே பதிவிறக்கம் செய்யும் Link கொடுக்கப்பட்டுள்ளது .

Joint Declaration form Download





இதில் உங்களின் PF அலுவலகம் எந்த மாவட்டத்தில் உள்ளதோ அதே மாவட்டத்தை பதிவு செய்து அதன் பின்னர் உங்களின் பெயர் ,உங்களின் UAN ,உங்களின் PF எண் ஆகியவைகளை பதிவு செய்யவும் .




இதன் பின்னர் அந்த படிவத்தில் உங்களின் சரியான பெயர் ஆதார் அட்டையில் எவ்வாறு உள்ளதோ அதே போல உங்களின் பெயர் ,பிறந்த தேதி ஆகியவைளை பதிவு செய்து அதனுடன் உங்களின் ஆதார் நகலை இணைக்கவேண்டும் .



இதன் பின்னர் உங்களின் நிறுவனத்தில் HR சந்தித்து அவரிடம் நிறுவனத்தின் சீல் வைத்து அவர் கையெழுத்திட வேண்டும் .இதன் பின்னர் இந்த படிவத்தை ஒரே உங்களின் PF அலுவலகத்திற்கு அனுப்புவார் .இதன் பின்னர் அடுத்த 30 நாட்களுக்கு பின்னர் உங்களின் பெயர் மற்றும் உங்களின் பிறந்த தேதி மாற்றம் ஆகிவிடும் .


மேலும் உங்களின் பிறந்த தேதியில் வருடம் தவறாக இருந்தால் அதற்க்கு உங்களின் Passport ஓர் உங்களுடைய பிறப்பு சான்றிதழ் அல்லது உங்களின் உங்களின் பள்ளியில் உள்ள மார்க் சீட் இதில் ஏதாவது ஒன்றை pf அலுவலகத்தில் நேரில் சென்று காண்பிக்க வலியுறுத்தினால் காண்பிக்க வேண்டும் .


இவ்வாறு காண்பிக்காத நிலையில் உங்களின் தவறுகளை திருத்தம் செய்ய முடியாது . 

No comments:

Post a Comment