பேட்டரிகள் மூலமாக இயங்கும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனகள் வாங்கினால் 100%வரிவிலக்கு தருவதாக தமிழக அரசு அறிவிப்பு
Introduction :
தற்போது தமிழக அரசு மாசு கட்டுப்பாட்டை மேம்படுத்துவதற்காக பல விதமான
நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதில் ஒன்றாக தற்போது பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு வரி சலுகைகளை அறிவித்து
அரசாணையினை வெளியிட்டுள்ளது.
Full Details :
தற்போது அதிகமாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளதால்
காற்று மிகவும் மாசுபட தொடங்கியுள்ளது. இதனை குறைப்பதற்காக தமிழக அரசு பலவிதமான
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி ஏற்கனவே இரண்டு சக்கர வாகனங்கள் 15 வருடங்களுக்கு பின்னர் பயன்படுத்த தடை
விதிக்க போவதாக ஏற்கனவே அறிவித்த நிலையில் தற்போது புகையில்லா வாகனமான
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு அழித்து
உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு வரிவிலக்கு அளிப்பதால் மக்கள் பேட்டரியில் இயங்கும் வாகனங்களை
வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள் இதன் மூலமாக காற்று மாசுபாடு சற்று
குறைவதற்கு வாய்ப்புள்ளது என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளது.
மேலும் இதற்க்கு முன்னதாக 2008ல் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு 50%
வரையில் வரிவிலக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது முழுமையான வரிவிலக்கை
அறிவித்துள்ளது.
மேலும் மின்சார வாக்களின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனகளுக்கு
பலவிதமான வரிசலுகைகளை வழங்கப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி சலுகையானது 2022 ன் இறுதிவரை இருக்கும் எனவும்
அறிவித்துள்ளது.
நீங்கள் வரும் 2022 ம் வருடம் இறுதிக்குள் மின்சாரத்தில் இயங்கும் எந்த ஒரு
வாகனத்தை வாங்கினாலும் 100% வரையில் மோட்டார் வாகன வரிவிலக்கை பெற முடியும்
எனவும் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment