Thursday, November 5, 2020

தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதற்கான நேரத்தை வெளியிட்டது தமிழக அரசு

வரும் தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதற்கான நேரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 


Introduction :


தற்போது தீபாவளி நெருங்கிய நிலையில் தீபாவளியன்று பட்டாசுகள்  குறிப்பிட்ட நேரத்திற்குள் மட்டும் வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது  . 


இதுபற்றி சுற்றுசூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் கூறியதாவது உச்சநீதிமன்றம் உத்தரவின்படி காலை 6மணி முதல் இரவு 8 மணிவரையில் மட்டும் பட்டாசுகளை  வெடிக்க வேண்டும் எனவும் மாசில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. 


மேலும் பட்டாசுகளை வெடிக்கும்போது மிகவும் கவனமாகவும் பாதுகாப்புடனும் வெடிக்க வேண்டும். அதிகமான அதிர்வுகளை ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுத்தியுள்ளது. 

சிறுவர் சிறுமியர்கள் பட்டாசுகளை வெடிக்கும்போது பெற்றோர்கள் அவர்களை கவனமுடன்  பட்டாசுகளை கையாள்வது பற்றிய அறிவுரைகளை வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. 



மேலும் உங்களின் வீடுகளுக்கு அருகில் இருதய நோயாளிகள் இருந்தால் அந்த இடத்தில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்கும் படியும் குறிப்பிட்டுள்ளது. 


கடந்த ஆண்டு தீபாவளியானது சுஜித் என்கின்ற சிறுவனின் மரணத்தால் பலரும் தீபாவளியை மகிழ்ச்சியின்றி கொண்டாடாமல் இருந்தனர் இந்த ஆண்டின் தீபாவளியானது கொரோனவால் சம்பித்தாலும் இந்த தீபாவளி பலருக்கும் ஒரு புத்துணர்வை ஏற்படுத்த்தி அவர்களின்  வாழ்வில் ஒரு  நல்ல மாற்றத்தை கொடுக்கும்  எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 


நமது இணையதளத்தின் சார்பாக  உங்களுக்கும் உங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்து  கொள்வதில் மிக்க மகிழ்ச்சி .


💥💥All My Friends Wish you Happy Diwali 💥💥

7 comments:

  1. வசதியற்றோர்க்கு இனிப்பு,துணி,பட்டாசு வாங்கித் தாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. enna error varuthu bro insta gram la ms pannunka alathu mail pannunka check pannittu solren manikandan1520@gmail.com

      Delete
  2. Replies
    1. i will check to update this problem with solution

      Delete
  3. பிஎஃப் புதிதாக ஆதார் யாரார் வருகிறது காரணம் வருகிறது என்ன காரணம்

    ReplyDelete
    Replies
    1. enna error varuthu bro insta gram la ms pannunka alathu mail pannunka check pannittu solren manikandan1520@gmail.com

      Delete