Saturday, November 28, 2020

PF claim form 19 யை claim செய்த பின்னர் pension பணத்தை transfer செய்ய முடியுமா?

PF claim form 19 யை claim செய்த பின்னர் pension பணத்தை transfer செய்ய முடியுமா? 



Introduction :

இந்த பதிவில் நமது pf பணம் claim செய்வதில் பலருக்கும் இருக்கும் ஒரு மிக முக்கியமான சந்தேகம் என்னவென்றால் ஒரு முறை pf claim form19 யை மட்டும் claim செய்த பின்னர் pf pension பணத்தை மட்டும் transfer செய்ய முடியுமா? என்கிற சந்தேகம். இதனை பற்றிய முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம். 

Full Details of problem :

 நமது pf கணக்கில் DOE தேதியை பதிவேற்றம் செய்த பின்னர் நாம் அந்த pf கணக்கில் உள்ள பணத்தை claim செய்யலாம் அல்லது Transfer செய்யலாம். 

இதில் ஏதாவது ஒன்றை மட்டுமே online ல்  பண்ண முடியும். 

உதாரணமாக : நீங்கள் pf பணத்தை claim செய்ய  விரும்பினால் படிவம் 19 மற்றும் 10c யை உங்களால் claim செய்ய முடியும். 

அல்லது அந்த கணக்கில் உள்ள பணத்தை transfer செய்ய விரும்பினால் transfer செய்ய முடியும். 

இதற்கு மாறாக நீங்கள் படிவம் 19யை மட்டும் claim செய்துவிட்டு pension பணத்தை மட்டும் எடுக்காமல் விட்டு வைத்து விட்டு வேறு ஒரு நிறுவனத்தில் பணியில் சேர கூடாது. 

அப்படி சேரும்போது உங்களின் pf pension பணத்தை உங்களால் online வழியாக transfer செய்ய முடியாது claim செய்யவும் முடியாது . 

இது போன்ற தவறுகளை நீங்கள் செய்யும்போது பல விதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ள படுவது உறுதி. 

நீங்கள் உங்களின் pf பணத்தை claim செய்ய விரும்பினால் form 19 மற்றும் form10c யை claim செய்து எடுத்துவிடுதல் நல்லது. 

இதற்க்கு மாறாக நீங்கள் பாதி பணத்தை மட்டும் transfer செய்ய நினைத்தால் உங்களால் transfer செய்ய முடியாது. 

இது தான் விதிமுறை. இது தெரியாமல் பலரும் இந்த தவறை செய்து வருகின்றனர். 

நீங்கள் உங்களின் பணத்தை transfer செய்ய நினைத்தால் படிவம் 19 யை claim செய்யாமல் நேரடியாக transfer செய்யவேண்டும். 

How to cancel PF Online Claim or PF Transfer


Details of solution :

 

ஒருவேளை நீங்கள் படிவம் 19யை மட்டும் claim செய்துவிட்டு pension படிவம் 10c யை claim செய்யாமல் வைத்துவிட்டு வேறு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தால் உங்களின் முந்தய நிறுவனத்தில் உள்ள pension பணத்தை online வழியாக எடுக்கவோ அல்லது transfer செய்யவோ முடியாது. 

நீங்கள் இந்த தவறை செய்திருந்தால் உங்களின் pension பணத்தை pf அலுவகத்தில் மூலமாக transfer செய்ய முடியும். 

இதற்க்கு நீங்கள் scheme certifiate கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். 

நீங்கள் pension பணத்தை transfer செய்ய pf அலுவலகத்திற்கு நேரடியாக சென்று transfer form13 யை வாங்கி அதனை பூர்த்தி செய்து. அதனுடன் நீங்கள் transfer செய்யவிருக்கும் pension பணத்திற்கான scheme certificate யை இணைத்து உங்களின் pf அலுவகத்தில் சமர்ப்பிக்கும்போது உங்களின் pension பணம் transfer செய்ய முடியும். 

இந்த வேலையை செய்து முடிக்க அதிக சிரமத்தையும் அலைச்சலையும் சந்திக்க வேண்டியிருக்கும். ஆதாலால் இது போன்ற தவறுகளை செய்யாமல் இருப்பது சிறந்தது. 

No comments:

Post a Comment