Wednesday, November 25, 2020

சென்னையில் கொட்டி தீர்க்கும் கன மழை சம்பித்து நிற்கும் சென்னை அடுத்து என்ன நடக்கும்

 சென்னையில் கொட்டி தீர்க்கும் கன மழை சம்பித்து நிற்கும் சென்னை அடுத்து என்ன நடக்கும் 


தற்போது ஏற்பட்டுள்ளது நிவர் புயலின் காரணமாக சென்னை காஞ்சிபுரம் புதுசேரி ஆகிய பகுதிகளில் கனமழை நேற்று காலை  5.30 முதல் இரவு 8மணி வரையில் மழை கொட்டி தீர்த்தது. இதில் சென்னையில் பல பகுதிகளில் தண்ணீர் ஆறு போலாம் காற்றியளிக்கிறது. 



இதனால் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கையும்   பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

நேற்று நிலவரப்படி சென்னை  நுங்கம்  பக்கத்தில் 9.7செ. மீ மழையும் மீனம்பாக்கத்தில் 8.6செ.மீ மழையும் பதிவான  நிலையில் மீண்டும் இரவு 8 மணிக்கு மழை போலிய தொடங்கியது 

சென்னையின் இன்றய தற்போதைய நிலவரம் :


நிவர் புயல் இன்று 25ம் தேதி காரைக்கால் மற்றும் மஹாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில் இந்த புயலின் தாக்கம் மேலும் அதிகரித்து தற்போது சென்னையில் அதிக கன மழை பொழிந்த  வண்ணம் உள்ளது. 



இன்று 25ம் தேதி காலை 3மணி முதல் லேசான மழை பொழிந்த நிலையில் தற்போது காலை 7.30 மணிக்கு பின்னர் மழையின் தாக்கம் மேலும் அதிகரித்து காணப்படுகிறது. 

கடந்த இரண்டு நாட்களை விடவும் மிக அதிக மான காற்றுடன் தற்போது சென்னையின் பல இடங்களிலும் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. 

காலை 8மணி நிலவரப்படி சென்னையின் பல பகுதிகளிலும் கன மழை பொலிந்து  வருகிறது இதே நிலை தொடர்ந்தாள் சென்னையின் நிலை மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்படும். 

அடுத்து என்ன நடக்கலாம் :


தற்போது நிலவர படி சென்னையின் நிலையை யாராலும்  உறுதியாக சொல்ல முடியாது. நிவர் புயலின் வேகம் மணிக்கு 110கீலோ மீட்டர்  வேகத்தில் கரையை  நோக்கி நகர்ந்து வருகிறது. 

இன்னும் 400கிலோ மீட்டர் தூரத்தில் நிவர் புயல் இருக்கும் இந்த நிலையிலேயே சென்னையின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 



தற்போது பெய்து வரும் காற்றுடன்  கன மழையால் சென்னையின் பல பகுதிகளுக்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு எங்கும் செல்ல முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். 

நிவர் புயல் கரையை கடக்கும் போது அதன் வேகம் குறைந்தால் மட்டுமே பெருமளவிலான பொருள்  சேதம் தவிர்க்க முடியும். 

மீண்டும் சென்னைக்கு ஒரு பேரழிவு காத்துகொண்டிப்பது தற்போது பெய்துவரும் மழையின் மூலமாகவே  உணர முடியும். 

புயல் கடலில் மையம் கொண்டிருக்கும் இந்த நிலைக்கே சென்னைக்கு நாக்கு தள்ள ஆரம்பித்து விட்டது  என்றால் புயல் கரையை கடக்கும்போது சென்னையின் பல இடங்கள் காணாமல் கூட போகலாம்.

புயலின் நகர்வு தற்போது மணிக்கு 5 கீ மீ  வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது குறிப்பிட தக்கது. 

இந்த புயல் கரையை கடைக்கும் போது அதன் வேகம் குறைந்தால் மட்டுமே பெருமளவு பொருள் சேதம் தவிர்க்க முடியும்  . தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த நிவர் புயலில் இருந்து காரைக்கால் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் தப்பிப்பது என்பது மிகவும் கடினம். 



நிவர் புயலின் நகர்வு மணிக்கு 5கீமீ வேகத்தில் இருப்பதால் இன்று 25ம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிவர் புயல்  நாளை 26 ம் தேதி கரையை கடக்கும்  என்று எதிர்பார்க்க படுகிறது. 

சென்னையின் நிலை நாளை காலையில் தான் முடிவாகும் அதுவரையில் சென்னையின் நிலை? 

No comments:

Post a Comment