Wednesday, November 4, 2020

ஆந்திராவில் பள்ளிகளை திறந்ததால் ஏற்பட்ட விபரீதம் தெரியுமா ?

 ஆந்திராவில் பள்ளிகளை திறந்ததால் ஏற்பட்ட விபரீதம் தெரியுமா ?










Introduction :

 தற்போது ஆந்திராவில் பள்ளிகளை திறந்த 3 நாட்களில் 150மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  .



Full Details :

மத்திய அரசு தற்போது  இந்தியாவில் கொரோனா நோய் தொற்று கணிசமாக குறைந்துவருவதை கருத்தில் கொண்டு அந்தந்த மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை  திறப்பது குறித்து அந்தந்த மாநிலத்தின் முதல்வர்  முடிவெடுத்து கொள்ளலாம்  என அறிவித்திருந்த நிலையில் ஆந்திராவில்  நேற்று முன்தினம் பள்ளிகள்  மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது .

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் என்ற மாவட்டத்தில் 3 நாட்களில் மட்டும் 150 மாணவர்களுக்கும் 10 ஆசிரியர்களுக்கும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியபட்டத்து .

மூன்று நாட்களில் இவ்வளவு பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது அம்மாநில மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது .



தற்போது தமிழ் நாட்டில் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று அறிவித்த சூழல் இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .


இந்த சூழலில் தமிழகத்தில் பள்ளிகளை திறந்தாள் தமிழ்நாட்டிற்கும் இதே நிலை வரலாம் எனவும் மக்கள் அச்சத்தில் உள்ளனர் .மேலும் தமிழ் நாட்டில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து வரும் 9ம் தேதி ஆலோசனை கூட்டம் நடக்க விருப்பது குறிப்பிடத்தக்கது .

No comments:

Post a Comment