Tuesday, November 3, 2020

இனிமேல் வங்கியில் பணம் போட்டாலும் எடுத்தாலும் கட்டணம் செலுத்தவேண்டுமாம்

 இனிமேல் வங்கியில் பணம் போட்டாலும் கட்டணம் எடுத்தாலும் கட்டணம் புதிய அறிவிப்பு வெளியீடு


Introduction :


தற்போது சில வங்கிகளில் பணம் போட்டாலும் சரி எடுத்தாலும் சரி கட்டணம் வசூலிக்க போவதாக வங்கிகள் அறிவித்துள்ளன. 



எந்தெந்த  வங்கிகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்க உள்ளது என்பதை  இந்த பதிவில் பார்க்கலாம். 

Bank charges Details :


தற்போது Bank of Baroda மற்றும் axis வங்கி மற்றும் ICICI வங்கி இவை  இனிமேல் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் பிடித்தம் செய்ய  போவதாக அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. 

Bank of Baroda :


இதன் படி bank of Baroda தனது வாடிக்கையாளர்கள் ஒருவர்  அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகப்பற்ற வரம்பிற்கு  அதிகமான செய்யும் பண பரிவர்தனைக்கு கட்டணம் பிடிக்க போவதாக வெளியிட்டுள்ளது. 

இதன் படி ஒரு வாடிக்கையாளர் ஒரு மாதத்திற்கு 3 முறை மட்டும் இலவசமாக பணம் எடுத்துக்கொள்ள முடியும் அதான் பின்னர் 4வதாக எடுக்கும் பணத்திற்கு 150 ரூபாய் வரையில் கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளது . 


இந்த கட்டணமானது சிசி அக்கௌன்ட், ஓவர் டிராப்ட் அக்கௌன்ட், கரண்ட் அக்கௌன்ட் களுக்கு பொருந்தும். 

மேலும் சேவிங் கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கியின் வேலை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பணத்தை machine வழியாக deposit செய்தால் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். 

நீங்கள் இரவு 8 மணிமுதல் காலை 6 வரையில் உள்ள நேரத்தில் பணத்தினை machine ல் deposit செய்தால் இந்த கட்டணம் பிடித்தம் இருக்கும். 

அதேபோல வங்கி விடுமுறை நாட்களில் பணம் deposit செய்தாலும் 50ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்படும். 

Axis Bank :

இதே போன்று Axis வங்கியானது ஏற்கனவே இந்த விதிமுறையினை கடைப்பிடித்து வருகிறது. 

கடந்த ஆகஸ்ட் 1/ 2020 முதல் axis வங்கியானது தனது வாடிகையாளர்கள் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரையில் machine வழியாக deposit செய்யும் பணத்திற்கு 50 ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்து வருகிறது. 



இது போன்று bank of baroda வங்கியும் முதியோர் pension வாங்கும் நபர்கள் இரவு நேரத்தில் பணத்தை deposit செய்தால் 40 ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்கிறது. 

Machine மூலமாக deposit செய்யும் பணத்திற்கு மட்டுமே இந்த கட்டண பிடித்தம் இருக்கும் வங்கியில் நேரடியாக சென்று deposit செய்தால் கட்டணம் இல்லை. 

மேலும் மெட்ரோ நகரங்களில் கணக்கு வைத்திருக்கும் வாடிகையாளர்கள் ஒரு மாதத்திற்கு 3 முறை மட்டுமே இலவசமாக பணத்தை ATM வழியாக எடுக்க முடியும். 

அதன் பின்னர் எடுக்கும் பணத்திற்கு 125 ரூபாய் வரையில் கட்டண பிடித்தம் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

இந்த கட்டண பிடித்தம் மற்ற வங்கிகளுக்கு வரலாம். 

No comments:

Post a Comment