How To Download Voter ID Card Online
Introduction :
இந்த பதிவில் நமது வாக்காளர் அடையாள அட்டை பற்றிய ஆன்லைன் வழியாக எப்படி பதிவிறக்கம் செய்வது என்பதை பார்க்கலாம் .
இதற்க்கு https://www.nvsp.in/ என்ற இனைய தளத்தின் மூலமாக நமது வாக்காளர் அடையாள அட்டை பற்றிய தகவல்களையும் புகைப்படத்துடன் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் .
NVSP Application Download Link :
இதற்க்கு முன்னதாக நமது வாக்காளர் அடையாள அட்டை பற்றிய தகவல்களை புகைப்படம் இல்லாமல் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிட தக்கது .
தற்போது உங்களின் அடையாள அட்டை பற்றிய தகவல்களை உங்களின் புகைப்படத்துடன் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் .
வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய முதலில் உங்களின் தொலைபேசி எண்ணினை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் ( Registration ).
Registration செய்வது :
முதலில் https://www.nvsp.in/ என்ற இனைய தளத்திற்கு செல்லவும் அந்த பக்கத்தில் இடதுபக்கமாக அதிகமான தேர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் Login/Registration என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல ஒரு login செய்வதற்கான பக்கம் தோன்றும் .நாம் இந்த தளத்திற்கு முதல் முறையாக வருவதால் நமக்கு எந்த ஒரு id-யும் இருக்கத்து அதனால் நமது id-யை பதிவு செய்ய வேண்டும் .
அதற்க்கு அந்த பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள Register as New user என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
இப்போது உங்களுக்கு உங்களின் ID-யை பதிவு செய்ய விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப பக்கம் தோன்றும் இதில் முதலில் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவிட வேண்டும் .
அதன் பின்னர் அதன் அருகில் உள்ள captcha எண்ணினை அதன் அருகில் உள்ள கட்டத்தில் பதிவிட வேண்டும் .
இப்போது அதன் கீழே கொடுக்கப்பட்டுள்ள send OTP என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .இப்போது நீங்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கு ஒரு password ஓன்று கிடைக்கும் அதனை enter OTP என்கிற இடத்தில் பதிவு செய்யவும் .
NVSP Application Download Link :
இப்போது submit கொடுக்கவும் இப்போது உங்களின் எண்ணானது உறுதி செய்ய பட்டுவிடும் .
அடுத்ததாக அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Epic Number என்ற கட்டத்தில் உங்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணினை அதிவு செய்யவும்.
இதன் பின்னர் உங்களின் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும் .இதனை தொடர்ந்து உங்களின் Password மற்றும் Confirm Password என்கிற இடத்தில் உங்களின் Password-யை பதிவு செய்யவும் .
இந்த Password ஆனது உதாரணத்திற்கு Arun@123 இதுபோல பதிவு செய்யவும் அப்படி செய்தால் மட்டுமே உங்களின் Password இந்த தளத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் .
இறுதியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள Register என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
இப்போது உங்களின் ID-ஆனது பதிவு செய்யபட்டுவிடும் .இப்போது உங்களின் ID-யை login செய்யவும்
வாக்காளர் அடையாள தட்டை விபரங்கள் பதிவிறக்கம்
இப்போது உங்களின் ID-யை login செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டதுபோல பக்கம் தோன்றும் .
அடுத்ததாக கீழே கொடுக்கப்பட்ட பக்கத்தில் Electors verification program என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
இப்போது அடுத்த பக்கம் தோன்றும் இதில் verify self details என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
இப்போது அடுத்த பக்கம் தோன்றும் இதில் உங்களின் பெயர் உங்களின் தந்தை பெயர் மற்றும் உங்களின் வயது ,பாலினம் ஆகியவைகள் தோன்றும் .அதன் அருகில் view details என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதனை தேர்வு செய்யவும் .
இப்போது உங்களின் வாக்காளர் அடையாள அட்டை பற்றிய அனைத்து விபரங்களும் உங்களின் புகைப்படத்துடன் திரையில் தோன்றும் இதன் மூலமாக உங்களின் வாக்காளர் அடையாள அட்டை பற்றிய அனைத்து விபரங்களையும் தெரிந்துகொள்ள முடியும் .
மேலும் உஙக்ளின் வாக்காளர் அட்டையில் என்ன புகைப்படம் உள்ளது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும் .
மேலும் உங்களின் வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதனை சரிசெய்யவும் முடியும் .
உங்களின் வாக்காளர் அடையாள அட்டை பற்றிய விபரங்களையும் புகைப்படத்துடன் இப்போது கொண்டுவரப்பட்ட புதிய மாற்றாத்தால் நாம் காண முடியாகிறது .
அடுத்த பதிவில் வாக்காளர் அடையாள அட்டை பற்றிய விபரங்களை ஆன்லைனில் திருத்தம் செய்வது எப்படி இன்பத்தை காணலாம் .
No comments:
Post a Comment