How to change my address in indane gas connection online
Introduction :
தற்போது இந்தியன் ஆயில் Gas connection வைத்திருப்பவர்கள் தங்களுடைய முகவரியினை மாற்ற விரும்பினால் ஆன்லைன் வழியாக மாற்றம் செய்துகொள்ள முடியும் .இதனால் நீங்கள் நேரடியாக gas Agency யை தொடர்புகொள்ள தேவை இல்லை .
இதனால் மக்களின் அலைச்சல் வெகுவாக குறையும் .அதனை எவ்வாறு மாற்றம் செய்வது என்பதை பார்க்கலாம் .
LOGIN Indian gas website :
Click this link Bellow
1.இந்த இணையதளத்திற்கு வந்த பின்னர் login என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களின் user மின்னஞ்சல் முகவரி மற்றும் உங்களின் password பதிவு செய்து உங்களின் profile பக்கத்தினை ஓபன் செய்து கொள்ளவும் .
2.இதன் பின்னர் இடது பக்கம் கொடுக்கப்பட்டிருக்கும் LPG என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
3.இதனை தொடர்ந்து உங்களின் உங்களின் profile பக்கம் தோன்றும் இதில் உங்களின் புகைப்படம் பதிவேற்றும் பக்கத்தில் Edit என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதனை தேர்வு செய்யவும் .
5.இப்போது உங்களின் தற்போதைய முகவரி உங்களின் தொலைபேசி எண் மின்னஞ்சல் முகவரி மாற்றம் ஆகிய தகவல்கள் காண்பிக்கப்படும் இதன் மூலமாக நீங்க மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் மாற்றம் செய்துகொள்ள முடியும் .
இப்போது உங்களின் பழைய முகவரி கொடுக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு கீழே change என்று தேர்வு ஓன்று கொடுக்கப்பட்டிருக்கும் அதனை தேர்வு செய்யவும் .
6.இப்போது உங்களின் புதிய முகவரியினை பதிவு செய்யும் பக்கம் தோன்றும் அதில் உங்களின் முகவரியினை பதிவு செய்யவேண்டும் .மேலும் உங்களின் முகவரியினை மாற்றம் செய்திட அதற்க்கு ஏதாவது ஒரு ஆவணம் பதிவேற்றம் செய்யவேண்டும் .
அந்த ஆவணம் உங்களின் தற்போதைய முகவரியில் இருக்க வேண்டும் அவ்வாறு இருந்தால் மட்டுமே முகவரியினை மாற்றம் செய்ய முடியும் .
7.இப்போது உங்களின் முழு முகவரியினை பதிவு செய்த பின்னர் உங்களின் ஆவணத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் .
நீங்கள் பதிவேற்றம் செய்யும் ஆவணத்தின் அளவு 512KB க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் .
8.உங்களின் ஆவணங்களை பதிவேற்றம் செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சப்மிட் என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .இதன் பின்னர் உங்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு ஒரு one time password ஓன்று அனுப்பப்படும் அதனை பதிவு செய்து உறுதி செய்துகொள்ளவும் .
9.இப்போது உங்களுக்கு ஒரு Reference Number ஓன்று கொடுக்கப்படும் அதனை நீங்கள் குறித்து வைத்துக்கொள்ளவேண்டும் உங்களின் முகவரி மாற்றத்திற்கான தற்போதைய நிலையை அறிந்துகொள்ள இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .
இதன் பின்னர் உங்களின் தகவல்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு உங்களின் முகவரி மாற்றம் செய்யப்படும்.
No comments:
Post a Comment