Thursday, April 30, 2020

Federal Bank Zero balance Saving Open Online

             Federal Bank Zero balance Saving Open Online 







Introduction :


தற்போது பெடரல்  Zero Balance Saving கணக்கினை உங்களின் தொலைபேசி Application யை பயன்படுத்தி உங்களின் வீட்டில் இருந்துகொண்டே நீங்களே துவங்கலாம் .





இந்த கணக்கினை பொறுத்தவரையில் நீங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட பணத்தினை உங்களின் வங்கி கணக்கில்  இருப்பு வைக்க வேண்டிய அவசியமில்லை .




மேலும் இந்தக் கணக்கினை பொறுத்தவரையில் உங்களுக்கு VISA Type ATM அட்டை வழங்கப்படுகிறது .




இந்த அட்டைக்கு 300ரூபாய் +tax சேர்த்துசெலுத்தி இந்த ATM அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் .

மேலும் இந்த கணக்கில் உங்களுக்கு காசோலையும்  பெற்றுக்கொள்ள முடியும் .

இந்த காசோலை ஒரு பக்கத்தின் விலை 5ரூபாய் ஆகும் .


Application Download Link :





How to Register :

Step - 1

முதலில் இந்த application யை பதிவிரக்கம் செய்து கொள்ளவும் .அதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து ஒரு One Time Password  மூலமாக verify செய்துகொள்ளவும் .


இதன் பின்னர் உங்களின்  E -kyc Account யை தேர்வு செய்யவும் .இதன் பின்னர் உங்களின்  Application யை Login செய்வதற்கு MPIN யை உருவாக்கி கொள்ளவும் .

Step -2

இந்த MPIN எண்ணானது 6-இலக்கத்தில் இருக்க வேண்டும் .


இதன் பின்னர் உங்களின் மாநிலம் மற்றும் உங்களின் வங்கி கிளையை தேர்வு செய்யவேண்டும் ,அதனை தொடர்ந்து உங்களின் உங்களின் மாத வருமானத்தை தேர்வு செய்யவும் இதன் பின்னர் உங்களின் மின்னஞ்சல் முகவரியினை தேர்வு செய்யவும் இதனை தொடர்ந்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் proceed என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


step - 3

இதன் பின்னர் உங்களின் ஆதார்  எண்ணினை பதிவு செய்யவேண்டும் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டளைகளுக்கு சம்மதிக்கிறேன் என்பதற்கு அதன் அருகில் கொடுக்கப்பட்டிருக்கும்  கட்டத்தில் டிக் செய்து கொள்ளவும் .

இதன் பின்னர் submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .இப்போது உங்களின் ஆதார் எண் எந்த தொலைபேசி என்னுடன்  இணைக்கப்பட்டுள்ளது அந்த எண்ணிற்கு ஒரு One Time Password யை பதிவு செய்து  உங்களின் ஆதார் எண்ணினை verify செய்துகொள்ளவும்.


Step - 4 

இதனை தொடர்ந்து உங்களிடம் பான் அட்டை இருந்தால்  பான் அட்டையின் முன்பக்கத்தினை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்து கொள்ளவும் .இல்லை என்றால் Skip என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


இதனை தொடர்ந்து உங்களிநாதர் அட்டையில் உள்ள உங்களின் தகவல்கள் உங்களுக்கு காண்பிக்கப்படும் அதனை ஒரு முறை பார்த்து சரிபார்த்து கொள்ளவும் .இதனை தொடர்ந்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் proceed என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


Step - 5

இதனை தொடர்ந்து உங்களின் தந்தை மற்றும் தாயின்  பெயர் மற்றும் நீங்கள் திருமணம் ஆனவரா அல்லது திருமணம் ஆகாதவர் என்பதை பதிவு செய்யவும் .இதனை தொடர்ந்து உங்களின் Nominee யை தேர்வு செய்யவும் உங்களுக்கு விருப்பம் இல்லாமல் இருந்தால் No என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

இதனை தொடர்ந்து உங்களின் தற்போதைய முகவரியினை பதிவு செய்யவும் ,நிரந்தர முகவரியும் உங்களின் தற்போதைய முகவரியும் ஒரே முகவரியாக இருந்தால் மேலே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் டிக் செய்து கொள்ளவும் .


Step  - 6

இதனை தொடர்ந்து அடுத்து ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் மதம் ,ஜாதி ,உங்களின்கல்வி தகுதி ,மற்றும் உங்களின் பனி புரியும் நிறுவனத்தின் பெயர் ஆகியவைளை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


இப்போது உங்களின் Zero Balance Saving  கணக்கு எண் மட்டும் உங்களின் customer ID ஆகியவை உங்களுக்கு காண்பிக்கப்படும் .இதன் பின்னர் இந்த கணக்கினை நீங்கள் பயன்படுத்த தொடங்கலாம் .


இந்த கணக்கினை பொறுத்தவரையில் ஒரு ஆண்டுக்கு 2இலச்சம் வரையில் நீங்கள் டெபாசிட் செய்துகொள்ள முடியும் .மேலும் இந்த கணக்கிநை ஒரு ஆண்டுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் .


மேலும் இந்த கணக்கிநை தொடர்ந்து உங்களின் வாழ் நாள் முழுவதும் பயன்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் Full KYC பதிவு செய்வது அவசியம் .




No comments:

Post a Comment