PF Claim Rejected - MEMBER NAME NOT PRINTED ON CANCELLED CHEQUE
Introduction :
- பெரும்பாலான PF கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையளர்கள் அவர்களுடைய PF பணத்தினை எடுக்க ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கின்றனர் அவ்வாறு விண்ணப்பிக்கும் பொது அவர்களின் PF claim குறிப்பிட்ட சில காரணங்களுக்காக நிராகரிக்க படுகிறது (PF Claim Rejected ).
- அவ்வாறு நிராகரிக்கப்படும் விண்ணப்பங்களில் நிராகரிப்புக்கு காரணம் PF Claim Rejected - MEMBER NAME NOT PRINTED ON CANCELLED CHEQUE இதுவே அதிகமாக உள்ளது .
- இது போன்ற நிராகரிப்பு எதனால் வருகிறது? அதனை எப்படி சரி செய்வது? எப்படி மறுபடியும் விண்ணப்பிப்பது ?என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .
The Reason for the Rejection:
( PF Claim Rejected - Member Name Not printed on cancelled cheque )
- என்ன காரணத்தினால் இதுபோன்ற விண்ணப்ப நிராகரிப்பு ஏற்படுகிறது என்றால் PF கணக்கு வைத்திருப்பவர்கள் அவருடைய வங்கி கணக்கினை அவர்களுடைய PF கணக்குடன் இணைத்திருப்பார்கள் அப்படி அவர்கள் எந்த வங்கியின் கணக்கு எண்ணினை pf கணக்குடன் இணைத்திருக்கிறார்களோ அந்த வங்கியில் வழங்கப்பட்ட காசோலையில்
1.விண்ணப்பித்தவரின் பெயர் தவறாக print செய்யப்பட்டிருக்கலாம்,
அல்லது
2.அவருடைய பெயர் காசோலையில் print செய்யப்படாமல் இருக்கலாம்.
இந்த இரண்டு காரங்களே முக்கிய காரணம் .
- இது தவிர வங்கியின் காசோலை இல்லாதவர்கள் அவர்களுடைய வங்கியின் Passbook யை scan செய்து விண்ணப்பித்திருந்தாலும் இது போன்ற நிராகரிப்பு ஏற்படலாம் .
- ( காரணம்: அவர்களுடைய வங்கி passbook ல் printed செய்யப்பட்ட அவருடைய பெயர், Acc No, IFSC Code, தெளிவாக இல்லாமல் இருக்கலாம் இந்த காரணத்தாலும் அவர்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படும் . )
Solution :
- இந்த குறிப்பிட்ட காரணகால் உங்களின் PF Claim Rejected செய்யப்பட்டால் கவலை கொள்ள தேவை இல்லை .இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களில் உங்களின் தகவலை சரி செய்தால் பொது .
- நீங்கள் PF Claim ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பொது நீங்கள் பதிவேற்றம் செய்த (Upload scan Documents )ஆவணம் எது ?
A .வங்கி காசோலை (or ) B .வங்கியின் Passbook
A .வங்கி காசோலை:
- வங்கியின் காசோலையை பதிவேற்றம் செய்து PF Claim செய்ய விண்ணப்பித்தவர்கள் உங்களின் காசோலையில் print செய்யப்பட்ட
1.உங்களின் பெயர் தவறாக இருக்கலாம் ,
2.உங்களின் பெயர் உங்களின் காசோலையில் print செய்யப்படாமல் இருக்கலாம் ,
3.உங்களின் காசோலையில் print செய்யப்பட்ட உங்களின் பெயரில் ஏதாவது ஒரு எழுத்து தவறாக print செய்யப்பட்டிருக்கலாம் .
4.உங்களின் பெயர் சரியாக print செய்யப்பட்டும் நிராகரிக்கப்பட்டிருந்தால் நீங்கள் உங்களின் காசோலையை உங்களின் தொலைபேசியில் புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்திருக்கலாம் இது போன்ற காரணங்களால் நிராகரிக்கப்படும் .
- நீங்கள் பதிவேற்றம் செய்யும் காசோலையில் உங்களின் பெயர் உங்களின் UAN ல் எவ்வாறு உள்ளதோ அதுபோலவே print செய்யப்பட்டிருந்தால் உங்களின் claim நிராகரிக்கப்படாது .
B .வங்கியின் Passbook :
- இதில் வங்கியின் passbook யை பதிவேற்றம் செய்திருந்தால் உங்களின் claim கட்டாயம் நிராகரிக்கப்படும் .
- எப்போதுமே உங்களின் வங்கியின் காசோலையை மட்டுமே பதிவேற்றம் செய்வது மிகவும் சிறந்தது .வங்கியின் passbook யை பதிவேற்றம் செய்தால் பெரும்பாலும் நிராகரிக்கவே செய்கிறார்கள் .
- வங்கியின் காசோலை இல்லையென்று சொல்பவர்கள் உங்களின் வங்கிக்கு நேரடியா சென்று வங்கியில் உங்களின் பெயரில் காசோலை வேண்டும் என்று விண்ணப்பிக்கவும் இவ்வாறு விண்ணப்பிக்கு காசோலையில் உங்களின் பெயர் உங்களின் pf கணக்கில் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதோ அதே போன்று பிரிண்ட் ஆக வேண்டும் .
- அவ்வாறு இருந்தால் மட்டுமே உங்களின் pf claim Accept ஏற்றுக்கொள்ள படும் .
- மாறாக உங்களின் பெயரில் ஏதவாறு ஒரு எழுத்து தவறாக print செய்யப்பட்டிருந்தாலும் உங்களின் claim நிராகரிக்கப்படும் .
மேலும் தொடர்ந்து இது போன்ற பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும் (Follow )
உங்களின் சந்தேகங்களை கீழே பதிவு செய்யவும்
Thank You
No comments:
Post a Comment