Saturday, April 11, 2020

PF Claim Rejected Certificate enclosed is improper full details in Tamil

PF Claim Rejected Certificate enclosed is improper  full details in Tamil





Introduction :

  • நமது PF  பணத்தை ஆன்லைன் மூலமாக எடுப்பதற்கு விண்ணப்பிக்கும் பலருக்கும் அவர்களுடய  PF Claim Rejected செய்யபடுகிறது .இந்த நிராகரிப்புக்கு காரணம் ஒரு ஒருவருத்தருக்கும் வேறுபட்டும் வேறு வேறு காரணங்களுக்குகாகவும் நிராகரிக்க படுகிறது .


  • அதில் குறிப்பாக உங்களின் PF Claim நிராகரிப்புக்கு காரணம் Certificate enclosed is improper என  கொடுக்கப்பட்டிருந்தால் என்ன தவறு உங்களின் கணக்கில் இருக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .
  • இது போன்று உங்களின் pf Claim  நிராகரிக்கப்பட்டால்  கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்கள் சரிபார்க்கவும் இவ்வாறு சரிபார்ப்பதன் மூலமாக உங்களின் PF CLAIM நிராகரிக்கப்படுவதை தவிர்க்கலாம்  .


Error :


  • PF Claim Rejected Certificate enclosed is improper இவ்வாறு கொடுக்கப்பட்டிருக்கும் .


  • PF Claim Rejected Certificate enclosed is improper இவ்வாறு கொடுக்கப்பட்டிருந்தால் உங்களின் PF கணக்கில் தவறுகள் உள்ளது ஆனால் எந்த இடத்தில் அந்த தவறு உள்ளது என்று எங்களால் கண்டறிய முடியவில்லை நீங்கள் அதனை சரி பார்த்தபின்னர் மறுபடி விண்ணப்பிக்கவும் என்று அர்த்தம். 

என்ன தவறுகள் இருக்கலாம் ?[ What could be wrong?]


  • உங்களின் PF  Claim நிராகரிப்புக்கு காரணம் Certificate enclosed is improper என  கொடுக்கப்பட்டிருந்தால் அதற்க்கு காரணம் உங்களின் PF Account Profile Details அதாவது உங்களின் PF கணக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் உங்களின் சுய தகவல் 

1.பெயர் ,
2.பிறந்த தேதி ,
3.தந்தையின் பெயர் ,
4.பாலினம் ,

  • இதில் ஏதாவது ஒன்றில் தவறுகள் இருக்கலாம் .இது மட்டுமில்லாமல் உங்களின் KYC ஆவணங்களாக

1.ஆதார் அட்டை தகவல்கள் ,

2.உங்களின் வங்கி கணக்கில் குறிப்பிட்டுள்ள உங்களின் பெயர் ,இதில் ஏற்படும் தவறுகளுக்கு இந்த காரணம் பொருந்தும் .

மேலும் 

  1.  நீங்கள் உங்களின் ஆதார் அட்டையினை உங்களின்  PF கணக்கில் இணைத்த பின்னர் அதனை மறுபடியும் உங்களின் தேவைக்காக மாற்றம் செய்திருந்தால்  உங்களின் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களும் உங்களின்  PF கணக்கில் உள்ளதா தகவல்களும்  வேறு வேறு விதமாக இருக்கும் இதனால் உங்களின்  PF Claim  நிராகரிக்கப்படும் .

  • இன்னும் விரிவாக சொல்ல வேண்டும் என்றால் உங்களின் ஆதார் அட்டையினை உங்களின்  PF கணக்குடன் இணைத்த பின்னர் உங்களின் ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள உங்களின் பெயர் ,தந்தையின் பெயர் திருத்தம் ,உங்களின் பிறந்த தேதி திருத்தம் பாலினம் திருத்தம் செய்திருந்தால் இது போன்று  PF Claim நிராகரிக்கப்படும் .

2. உங்களின் வங்கி கணக்கின் தகவல்கள்  தவறாக இருக்கலாம் 

  • அதாவது உங்களின் வங்கி கணக்கில் குறிப்பிட்டுள்ள உங்களின் பெயர் உங்களின்  PF கணக்கில் வேறு விதமாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் இது போன்று உங்களின்  PF claim நிராகரிக்கப்படும் .
  • மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களில் ஏதாவது தவறுகள் இருந்தால்  மட்டுமே உங்களின் claim நிராகரிக்கப்படும் .

இதுபோன்ற தவறுகள் ஏற்பட்டவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள தகவல்களை சரி செய்வதன் மூலம் உங்களின்  PF Claim நிராகரிக்கப்படுவதை தரிக்கலாம் .

2 comments:

  1. Bro na our company la erunthu valiya vanthu 2 year aduthu mark exit update panitan than na claim try Pana anaku serive details la current company details varathu na Apidi claim panarathu

    ReplyDelete
  2. old company amount a new company account kku transfer pannunka apram athu credit aanathum claim pannunka

    ReplyDelete