Thursday, April 23, 2020

PF Claim Rejected member name not printed on cancelled cheque epfo

pf claim rejected member name not printed on cheque /Member name name not printed on cancelled cheque





Introduction :




உங்களின் PF Claim  நிராகரிப்புக்கு காரணம் member name not printed on cancelled cheque  என கொடுக்கப்பட்டிருந்தால் அதில் என்ன தவறு செய்திருப்பீர்கள் என்பதை இப்போது பார்க்கலாம் .மேலும் அதனை எவ்வாறு சரி செய்வது என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம் .


The reason for the rejection  நிராகரிப்புக்கு காரணம் :

உங்களின் PF கிளைம் நிராகரிப்புக்கு காரணம் member name not printed on cancelled cheque  என கொடுக்கப்பட்டிருந்தால் உங்களின் pf பணத்தினை claim செய்யும்போது நீங்கள் upload செய்த உங்களின் cheque Leaf ல் உங்களின் பெயர் printed செய்யப்படாமல் இருக்கலாம் .


அல்லது 

print  செய்பட்ட உங்களின்  பெயரில் ஏதாவது எழுத்துப்பிழைகள் இருந்தாலோ இதுபோன்ற நிராகரிப்பு ஏற்படும் .

அல்லது 

நீங்கள் உங்களின் PF பணத்தினை claim செய்வதற்கு cheque Leaf பதிவேற்றம் செய்வதற்கு பதிலாக உங்களின் வங்கி passbook யை பதிவேற்றம் செய்திருந்தாலும் கூட உங்களின் pf claim நிராகரிக்கப்பட்டு இது போன்ற (member name not printed on cancelled cheque )  காரணங்கள் உங்களுக்கு காண்பிக்கப்படும்  .

தீர்வு (Solution ):

இதுபோன்ற claim நிராகரிப்பை தருவிக்க உங்களின் cheque Leaf  ல் உங்களின் பெயர் print செய்யப்பட்டிருக்க வேண்டும் .

அவ்வாறு print செய்யப்பட்ட உங்களின் பெயர் உங்கள்  PF கணக்கில் எவ்வாறு உள்ளதோ அதே போன்று உங்களின் பதிவேற்றம் செய்யும் காசோலையிலும் print செய்யப்பட்டிருக்க வேண்டும் ,அவ்வாறு print செய்யப்பட்டிருந்தால் மட்டுமே உங்களின் claim ஏற்றுக்கொள்ளப்படும் .


உங்களிடம் காசோலை இல்லாமல் இருந்தாலோ அல்லது காசோலையில் உங்களின் பெயர் printed செய்யப்படாமல் இருந்தாலோ அதனை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டாம் .

அவ்வாறு விண்ணப்பிக்கும்போது உங்களின் claim கட்டாயம் நிராகரிக்கப்படும் .

அதேபோல வங்கியில் கொடுக்கப்பட்ட Passbook யை பதிவேற்றம் செய்தாலும் சிலருக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது அதிகமான நபர்களுக்கு claim நிராகரிக்கவே படுகிறது .



உங்களிடம் உங்களின் பெயரில் காசோலை இல்லாமல் இருந்தால் உங்களின் வங்கிக்கு சென்று விண்ணப்பித்து பெற்றுக்கொண்ட பின்னர் PF Claim செய்யவும் அதுவே சிறந்தது .


No comments:

Post a Comment